பனாமா பேப்பர்ஸ் மூலம்  மால்டா பிரதமரின் ஊழல்களை அம்பலப்படுத்திய பெண் பத்திரிகையாளர் படுகொலை!

பனாமா பேப்பர்ஸ் மூலம் மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட்டின் ஊழல்களை அம்பலப்படுத்திய பெண் பத்திரிகையாளர் கலிசியா கார் மீது

வலேட்டா: பனாமா பேப்பர்ஸ் மூலம் மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட்டின் ஊழல்களை அம்பலப்படுத்திய பெண் பத்திரிகையாளர் கலிசியா கார் மீது வெடிகுண்டுகளை வீசி கொலை செய்துள்ளனர்.  

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மால்டாவைச் சேர்ந்தவர் டேப்னி கருவானா கலிசியா (53). புலனாய்வு பத்திரிகையாளரான இவர் ஒன் "வுமன் விக்கிலீக்ஸ்" என்ற இணையதளத்தை தொடங்கினார். இந்த வலைதளத்தில் கலிசியா எழுதிய கட்டுரைகள் மக்களால் ஈர்க்கப்பட்டன. பனாமா ஆவணங்களுடன் தொடர்புடைய அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் உட்பட சர்ச்சைக்குரிய முக்கியமான தகவல்களையும் வெளிப்படுத்தினார். அவரது வலைத்தள பதிவுகள், இருபுறங்களிலும் ஒரு முள்ளாக இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு வரும் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து பாதுகாப்பு வேண்டி பதினைந்து நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். 

இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை அவர் வீட்டிலிருந்து வடக்கு மால்டாவில் பிட்னிஜா என்ற கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் மீது மர்மநபர்கள் சக்திவாய்ந்த வெடிகுண்டை வீசினர். இதில் காருடன் தூக்கி வீசப்பட்ட கலிசியா சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த அமைப்போ அல்லது தனி நபரோ இதுவரை பொறுப்பேற்கவில்லை.

பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்து குவிக்க உதவிய நிறுவனம்தான் மொசாக் ஃபென்செக்கா. அந்த நிறுவனத்தின் 11.5 மில்லியன் ஆவணங்கள் மற்றும் 214,488-க்கும் மேற்பட்ட கடல்வழி நிறுவனங்களின் விவரம், நிதி மற்றும் வழக்குரைஞர், வாடிக்கையாளர்கள் தகவல்கள், ஊழல் விவரங்கள் 2015-இல் பனாமாவின் மொசாக் ஃபென்செக்கா நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் ஜெர்மனி ஊடகம் ஒன்றில் கசியவிட்டப்பட்டன.  இதனை ஆராய இந்தியா உட்பட 107 நாடுகளின் செய்தியாளர்களின் கூட்டமைப்பு களமிறங்கியது. இதில் ஒருவராக இருந்தவர்தான் டேப்னி கருவானா கலிசியா. இந்த ஆவணங்கள்தான் பனாமா பேப்பர்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. பனாமா ஆவணங்களின் வெளிப்பாடுகள் பல நாடுகளின் அரசியலை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களுடன் தொடர்புடைய ஒரு வழக்கில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை ஜூலை மாதம் பதவி விலக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அவரை தகுதிநீக்கம் செய்தது. இதையடுத்து .அண்மையில்தான் நவாஸ் ஷெரீப்பின் பதவி பறிபோனது. 

ரஷ்ய அதிபர் புதின், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிக் கேம்ரன் என பல பெரும் தலைகள் பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், மால்டா பிரதமர் ஜோசப்பின் தில்லு முல்லுகளை வெளிச்சம் போட்டு காட்டிய காரணத்தால் கலிசியா கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் கூறுகையில், டேப்னி கருவானா கலிசியா என்னுடைய கடுமையான விமர்சகர் என்பது அனைவருக்கும் தெரியும், எனக்கு தெரியும். இருப்பினும் அரசியல் ரீதியிலும், தனிப்பட்ட முறையிலும் இந்த காட்டுமிராண்டித்தனத்தை யாராலும் நியாயப்படுத்த முடியாது. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த கொலைக்கு நீதி கிடைக்கும் வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com