பட்டாசு புகையால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

பட்டாசு புகையால் சென்னையில் காற்று மாசு பெருமளவு அதிகரித்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 
பட்டாசு புகையால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: பட்டாசு புகையால் சென்னையில் காற்று மாசு பெருமளவு அதிகரித்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதால் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட அளவை விட ஒன்றரை மடங்கு மாசு அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கனமீட்டருக்கு 100 மைக்ரான் என்பதே அனுமதிக்கப்பட்ட காற்றுமாசுபாட்டின் அளவாகும். ஆனால், இன்று இது 263 என்ற அளவில் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து பட்டாசுக்கள் வெடிக்கப்பட்டு வருவதால், சென்னை முழுவதும் புகைமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்கள் சுவாசிப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சாலைகளிலும் புகைமூட்டம் நிலவுவதால் வாகனஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com