முடி திருத்தும் தொழிலாளியை செருப்பால் அடித்த பஞ்சாயத்து தலைவர்: சமூக ஊடகங்களில் கண்டனம் 

பிகாரில் வீட்டில் நுழைந்ததற்காக 54 வயதுடைய முடி திருத்தும் தொழிலாளியை பஞ்சாயத்து தலைவர் பெண்களை விட்டு செருப்பால் அடிக்க
முடி திருத்தும் தொழிலாளியை செருப்பால் அடித்த பஞ்சாயத்து தலைவர்: சமூக ஊடகங்களில் கண்டனம் 

பாட்னா: பிகாரில் வீட்டில் நுழைந்ததற்காக 54 வயதுடைய முடி திருத்தும் தொழிலாளியை பஞ்சாயத்து தலைவர் பெண்களை விட்டு செருப்பால் அடிக்க வைத்தும், எச்சிலை துப்பி ருசிக்க வைத்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிகாரில் உள்ளிட்ட வடமாநில கிராமங்களில் தவறுகளில் ஈடுபடுபவர்களுக்கு நூதன தண்டனைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக காதல் திருமணம் செய்பவர்கள், கள்ளக்காதலில் ஈடுபடுபவர்கள், ஜாதி மாறி திருமணம் செய்பவர்களை கட்டி வைத்து கல்லால் அடிப்பது போன்ற நூதன தண்டனைகளை வழங்கப்படுவது வழக்கம்.

தவறே செய்யாதவர்களையும் ஆதிக்க சமுதாயத்தில் இருப்பவர்கள் தண்டிக்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கிராம பஞ்சாயத்து தலைவர் ஒருவர் தான் வீட்டில் இல்லாத போது நீட்டில் நுழைந்த முடிதிருத்தும் வயதான தொழிலாளி ஒருவரை மனித தன்மையே இல்லாமல் கொடூரமான முறையில் தண்டித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் சொந்த ஊரான ஷரீப் மாவட்டத்தில் உள்ளது அஜ்னவூர். இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக சுரேந்திரா என்பவர் இருந்து வருகிறார்.  

இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த 54 வயதான மகேஷ் தாக்கூர் என்ற முடி திருத்தும் தொழிலாளி பஞ்சாயத்து தலைவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். 

அஜய்பூர் பஞ்சாயத்துத் தலைவர் சுரேந்திர யாதவ் புதன்கிழமை மாலையில் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாத நிலையில், பெண்கள் மட்டுமே இருந்துள்ளனர். இதனையறியாத மகேஷ் தாக்கூர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதுகுறித்து வீட்டில் இருந்த பெண்கள் பஞ்சாயத்து தலைவரிடம் தெரிவித்துள்ளனர். 

இதனையறிந்த சுரேந்திரா மறுநாள் கடந்த வியாழக்கிழமை பஞ்சாயத்தை கூட்டியுள்ளார். அப்போது பெண்கள் அனைவரும் தங்களின் செருப்பால் முடி திருத்தும் தொழிலாளி மகேஷ் தாக்கூரை அடிக்க வேண்டும் என்றும், எச்சிலை துப்பி அதனை ருசிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். 

பஞ்சாயத்து தலைவரின் தீர்ப்புக்கு கட்டுப்பட்ட கிராம மக்கள் மகேஷ் தாக்கூரை செருப்பால் அடித்ததுடன் எச்சிலையும் ருசிக்க வைத்துள்ளனர். 

இது குறித்து ஷரீப் மாவட்ட துணை அதிகாரி சுதிர் குமார் கூறுகையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உள்ளோம். விசாரணையில் நடந்த சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முழுமையான அறிக்கை பெறப்பட்டதும் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், தயானந்த மன்ஜி மற்றும் தர்மேந்திரா யாதவ் உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சரன்பாத் யாதவ் என்பவர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என நளண்டா மாவட்ட காவல்துறை அதிகாரி சுதிர் குமார் போதிகா தெரிவித்துள்ளார். கதவை தட்டாமல் அவர் வீட்டிற்குள் நுழைந்தற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது..  

தாக்கூருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து சமூக ஊடகங்களில் பெரும் கண்டனம் எழுந்துள்ளது. 

இதுபோன்ற சம்பவங்கள் நாகரீக சமுதாயத்தில் நடைபெறுவதை சகித்துக்கொள்ள முடியாது என்று மூத்த பாஜக தலைவரும் சாலை கட்டுமானத்துறை அமைச்சர் நந்த் கிஷோர் யாதவ் கூறினார். மேலும் "குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறினார்

இத்தகைய சிறிய விஷயங்களுக்காக ஒரு வயதான மனிதனை எப்படி ஒரு மனிதர் நடந்த முடியும்?" என்று ஒருவர் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com