விமர்சனங்கள் இருந்தாலே இந்தியா ஒளிரும்: மெர்சல் படம் குறித்து கமல்ஹாசன் கருத்து

மெர்சல் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நடிகர் கமல்ஹாசன் மெர்சல் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து 
விமர்சனங்கள் இருந்தாலே இந்தியா ஒளிரும்: மெர்சல் படம் குறித்து கமல்ஹாசன் கருத்து

மெர்சல் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நடிகர் கமல்ஹாசன் மெர்சல் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

தடைகள் பலவற்றைக் கடந்து மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரிடமிருந்தும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. 

இந்நிலையில், படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நீக்க வேண்டும் என கூறிவரும் பாஜக தலைவர்கள் படத்தில் வெளியாகும் காட்சிகளுக்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் மெர்சல் படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “மெர்சலுக்கு சான்றளிக்கப்பட்டுள்ளது. அதை மறு சான்றளிக்க வேண்டாம். எதிர் விமர்சனங்களை தர்க்க ரீதியாக எதிர்கொள்வோம். விமர்சனங்களை அடக்காதீர்கள். விமர்சனங்கள் இருந்தாலே இந்தியா ஒளிரும்,” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com