ஹைதராபாத் விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹைதராபாத் ராஜுவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 பேரிடம் இருந்து 18,71,187 ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து அந்த நபர்களிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.