மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்ததாக ஹெச். ராஜா ஒப்புக்கொண்டதால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- விஷால்

மெர்சல் திரைப்படத்தை இணையத்தில் பார்த்ததாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஹெச். ராஜா தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள் என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்?- மெர்சல் படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக பார்த்ததாக ஹெச். ராஜா ஒப்புக்கொண்டது வேதனை தருகிறது. இதற்காக அவர்  பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com