அமித்ஷா மகன் பிரச்னையை திசைதிருப்பவே தாஜ்மஹால் சர்ச்சையை பாஜக உருவாக்கி வருகிறது: கன்னையா குமார் 

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மகன் பிரச்னையை திசைதிருப்புவதற்காகவே, தாஜ்மஹால் குறித்த சர்ச்சையை பாஜக உருவாக்கி
அமித்ஷா மகன் பிரச்னையை திசைதிருப்பவே தாஜ்மஹால் சர்ச்சையை பாஜக உருவாக்கி வருகிறது: கன்னையா குமார் 

சண்டிகர்: பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மகன் பிரச்னையை திசைதிருப்புவதற்காகவே, தாஜ்மஹால் குறித்த சர்ச்சையை பாஜக உருவாக்கி வருகிறது என தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் தெரிவித்துள்ளார். 

'தி வயர்' என்ற பிரபல ஆங்கில வலைதளச் செய்தி நிறுவனத்தில் அண்மையில் ஒரு செய்திக் கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில், அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா நடத்தி வரும் 'தி டெம்பிள் எண்டர்பிரைஸஸ்' நிறுவனத்தின் விற்றுமுதல் லாபம் (டர்ன் ஓவர்), மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பல நூறு மடங்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், உரிய உத்தரவாதங்களை வழங்காமலேயே பல்வேறு வங்கிகளிடமிருந்து அந்நிறுவனம் பல கோடி ரூபாய் கடன் பெற்றிருப்பதாகவும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. 

இதையடுத்து, இந்தக் கட்டுரையை சுட்டிக்காட்டி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பாஜகவினர், குறிப்பாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவின் மகன் அதிக பயனடைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் மீது ஏதேனும் குற்றச்சாட்டு வந்தால், அது உண்மையோ, உண்மைக்கு புறம்பானதோ, உடனடியாக அமலாக்கத் துறை, வருமானவரித் துறை சோதனைகள் நடத்தும். அதேபோன்று இந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியடதுடன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தன. 

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு வந்த கன்னையா குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

பாஜக தலைவர் அமித்ஷாவின் மகனது நிறுவனம் அடைந்த லாபம் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே தாஜ்மஹால் தொடர்பான சர்ச்சையை பாஜக உருவாக்கி உள்ளது.  

குஜராத்தில் நடைபெற்று வரும் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்து வருகிறது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் பிரச்சாரத்திற்கு எந்தவொரு கட்சியில் சேர மாட்டேன் என்று கன்னையா கூறினார்.

மேலும் வரும் காலங்களில் நான் அரசியலில் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. ஆனால், நான் எந்த அரசியல் கட்சிக்கும் முகவர்(ஏஜெண்ட்) இல்லை. சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர ஒரு கூட்டு இயக்கத்தின் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

"அனைவருக்கும் சமத்துவத்தை அடையும் வரை எதுவும் செய்ய முடியாது. அரசியல்வாதிகள் தங்களின் நன்மைக்காக மக்களைப் பயன்படுத்துகிறார்கள்," என்றும் நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில், ஒரு ஊடகவியலாளர்கள் அல்லது ஒரு பத்திரிகையாளர்கள் ரூ.100 கோடி மோசடி சம்பவங்களின் உண்மையை வெளிகொண்டு வர முயற்சிக்கும்போது, வழக்குகளால் மிரட்டப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள் என பெங்களூரில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையை சுட்டிக்காட்டி குற்றம்சாட்டி பேசினார்.

ஹிமாசலப் பிரதேசத்துடன் சேர்த்து, குஜராத்தில் தேர்தல் நடத்தாமல் விலகி நிற்பது, குஜராத் தேர்தல் தேதியை வெளியிடாதது, தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தாத நிலையில், தேர்தல் ஆணையம் தனக்கு இருக்கும் அரசியலமைப்பு கடமையைச் செய்ய முடியாமலும், தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத போது, ​​இந்திய அரசியலமைப்பு மிகவும் ஆபத்தானது என்பதையே குறிக்கிறது" என்றவர் குஜராத் தேர்தல் தேதியை வெளியிடாதது குறித்து தேர்தல் ஆணையத்தின் முடிவை குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பினார்.

அரசு அதிகாரிகள், முன்னாள், இந்நாள் நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது மாநில அரசின் உரிய முன் அனுமதி இல்லாமல் விசாரணை மேற்கொள்ள முடியாது என்று ராஜஸ்தான் மாநில அரசு கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ஓர் அவசர சட்டத்தை அந்த மாநில அரசு கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்தை விமர்சனம் செய்த கன்னையா, அரசாங்கமானது வழக்குகளை ஏற்றுக் கொள்ளும் வரை பொது ஊழியர்களுக்கு எதிராக எந்தவொரு தகவலையும் வெளியிடக்கூடாது என ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறது. ராஜஸ்தான் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஊழலையும் பாதுகாக்கும் நோக்கமாக உள்ளது என்றார்.

மேலும், அரசு அல்லது அரசாங்கத்தில் நடைபெறும் தவறான செயல்களுக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள், நாட்டு விரோதமாக முத்திரை குத்தப்படுவதாகவும், அரசை பாராட்டுபவர்கள் தேசியவாதிகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார். 

ஆரோக்கியமான விமர்சனங்களை ஒரு நேர்மையான முறையில் ஏற்க வேண்டும் என்று கூறியவர் ஜிஎஸ்டி விவகாரத்தில் சிறிய மீனை சாப்பிடுவதற்காக பெரிய முதலைகளுக்கு உதவி வருவதாகவும், ஜிஎஸ்டியால் நடுத்தர மக்களும், சிறிய வியாபாரிகளே அதிகயளவு பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் முதலாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறினார்.

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையான பிரச்னையாகவும், ஊழல் நிறைந்ததாகவும் இருந்துவரும் நிலையில், அரசாங்கம் தனியார் பெருநிறுவ முதலாளிக்களுக்கு ஆதரவாக நடனம் ஆடி வருகின்றனர்.

"கருப்பு பணம் தொடர்பான பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற அரசின் நடவடிக்கைகளால், நாட்டில் எதுவும் நடக்கவில்லை. தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் சில பெரும் தொழிலதிபர்கள் மட்டுமே நன்மைகளை பெற்று வருகிறார்கள், நடுத்தர மக்களும், சிறிய வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்" என்று கூறினார். விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்ந்து நடைபெற்றுதான் வருகிறது. அரசியலமைப்பில் விவசாயிகளுக்கு பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் தேவை என்று கூறினார்.

இடஒதுக்கீட்டின் படி "தனியார் துறையில் எந்த இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை மற்றும் பெரும்பாலான மக்கள் அதனடிப்படையில் தனியார் துறையில் பணிபுரியவும் இல்லை என்று கன்னையா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com