ரூ.5.5 லட்சம் கோடியில் 60 முக்கிய நதிகளை இணைக்க மோடி அரசு திட்டம்!

நாட்டின் 60 முக்கிய நதிகளை ரூ.5.5 லட்சம் கோடியில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
ரூ.5.5 லட்சம் கோடியில் 60 முக்கிய நதிகளை இணைக்க மோடி அரசு திட்டம்!


நாட்டின் 60 முக்கிய நதிகளை ரூ.5.5 லட்சம் கோடியில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

நாட்டின் மிகப் பெரிய நதிகளின் குறுக்கே அணைகள் கட்டி, மற்ற பகுதிகளுக்கு தண்ணீரைத் திருப்பிவிட்டால் மட்டுமே வெள்ளப் பாதிப்பிலிருந்து மீள முடியும்.

கடந்த வாரங்களில் இந்தியாவின் அண்டை நாடுகளான பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்றவை 2 ஆண்டுகளாக மோசமான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள வராலாறு காணாத வெள்ளமும், தென்இந்தியாவில் ஏற்பட்டுள்ள வறட்சியும் நரேந்திர மோடி அரசை சிந்திக்க வைத்திருப்பதாகவும், நதிகள் இணைப்பின் அவசியத்தை மத்திய அரசு உணர்ந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் வடமாநிலங்கள் வெள்ளத்தாலும், தென்மாநிலங்கள் வறட்சியால் தவிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதும், தமிழகம் தண்ணீருக்குத் தவிப்பதும் வாடிக்கையாகவே இருக்கிறது. நதிகள் இணைப்பால், வெள்ளம் வரும் காலத்தில் வறட்சிப் பகுதிகளுக்கு தண்ணீரைத் திருப்ப முடியும். இதனால், வெள்ளம் ஏற்படாமல் தவிர்க்கப்படுவதோடு வறட்சி குறைந்து விவசாயம் செழிக்கும் வாய்ப்பும் அதிகம் என கூறப்படுகிறது.

நதிகளை இணைப்பதால், சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படும் என்று எதிர்ப்பும் கிளம்புகிறது. சுற்றுச்சூழல், புலி ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் அரச குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி இந்த திட்டமானது நிறைவேற்றப்பட்டால் ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து நாட்டின் மிகப்பெரிய நதிகளை இணைக்க 87 பில்லியன் டாலர் (5,55,593 கோடி ரூபாய்) திட்டம் ஒன்றை துவங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான ஆய்வுப் பணிகளை இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த மெகாத் திட்டத்தில் சுமார் 60 ஆறுகள் இணைக்கப்பட உள்ளது. இதில், முதல் கட்டமாக பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேச மாநிலங்களில் ஓடும் கர்னாவதி-பெட்வா நதிகளை இணைக்கும் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

கர்னாவதி ஆற்றில் அணை கட்டப்பட்டு, அங்கிருந்து 22 கிலோ மீட்டர் (14 மைல்) தொலைவுக்கு கால்வாய் வெட்டி, பெட்வா நதிக்குத் தண்ணீர் கொண்டுசெல்லப்பட உள்ளது.  

குஜராத், மகாராஷ்டிராவில் ஓடும் நர்மதை, பர்தாபி நதிகளும் இணைக்கப்பட உள்ளன. இதே மாநிலங்களில் ஓடும் தாமன் கங்கா நதியை, பிஞ்சால் நதியுடன் இணைக்கும் முதல் கட்ட ஆய்வுப்பணிகள் முடிந்து விட்டன. இதற்கு ரூ. 2,764 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கர்னாவதி-பெட்வா திட்டம் மற்ற நதி ஒருங்கிணைப்பு திட்டங்களுக்கு முன்மாதிரியாக அமையும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அச்சன் கோயில் - வைப்பாறு, காவிரி - வைகை - குண்டாறுகளை இணைப்பதால், தமிழகத்துக்கு நல்ல பலன் கிடைக்கும்.

இந்த நதிகள் இணைப்பு திட்டம் குறித்து கென் கிராமத்தின் மூத்தவர் முன்னா யாதவ் கூறுகையில், "நாங்கள் இதுவரை எங்கள் கிராமத்தில் மின்சாரத்தை பார்த்ததே இல்லை," என்றும் அணை கட்டினால் எல்லோருக்கும் பயனளிக்கும் என்றால், "நாங்கள் எங்கள் பிள்ளைகளுடன் இந்த பகுதியிலிருந்து வெளியேற தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையில் இந்த திட்டத்திற்கான அனுமதி வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர், புது தில்லியில் இருந்து சுமார் 805 கிமீ (500 மைல்) தூரத்திலான கட்டுமானப் பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

'கிடைக்கும் தண்ணீரைவிட அதிகத் தண்ணீரை வீணடிக்கும் நாடு இந்தியா'' என சர்வதேச நீர் மேலாண்மை வல்லுநர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com