தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்பு

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நசீம் ஜைதி பதவி வகித்தபோது ஏ.கே.ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகியோர் தேர்தல்
தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்பு

புதுதில்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நசீம் ஜைதி பதவி வகித்தபோது ஏ.கே.ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக  இருந்து வந்தனர். நசீம் ஜைதி கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றதை அடுத்து, ஏ.கே.ஜோதி தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை செயலாளராக பணியாற்றிய சுனில் அரோரா (61) நேற்று வியாழக்கிழமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டது.

இதையடுத்து இன்று தலைமை தேர்தல் ஆணையராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் அரோரா(61) பொறுப்பேற்றுக்கொண்டார்.

சுனில் அரோரா நிதி, ஜவுளி, சிவில் விமான போக்குவரத்து உள்ளிட்ட அமைச்சகங்களிலும், திட்டக்குழுவிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com