கனமழை அறிவிப்பு எதிரொலி: அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்க கிரண்பேடி அறிவுறுத்தல்

3 நாள்கள் கனமழை பெய்யும் என்ற வானிலை நிலையத்தின் அறிவிப்பு எதிரொலியாக அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
கனமழை அறிவிப்பு எதிரொலி: அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்க கிரண்பேடி அறிவுறுத்தல்

3 நாள்கள் கனமழை பெய்யும் என்ற வானிலை நிலையத்தின் அறிவிப்பு எதிரொலியாக அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.

அவர் தனது கட்டுரை (டுவிட்டர்) சமூகவலை தளப்பக்கத்தில் கூறியுள்ளதாவது;

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வரும் 5ஆம் தே வரை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3ஆம்
தேதி முதல் 5ஆம் தேதி வரை பலத்த, மிக பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. எனவே பேரிடர் மேலாண்மைத் துறையுடன் அனைத்து துறைத் தலைவர்களும் இணைந்து தயாராக இருக்க வேண்டும். இதுதொடர்பாக துறைவாரியாக ஆய்வு செய்ய்பட்டதா எனத் தெரியவில்லை.

கூட்டாக முயன்றால் இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம். பொதுமக்களும் சுய உதவிக்குழுக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  கனமழையை சமாளிக்க ஏதுவாக அனைத்து துறையினரும் தயாராக இருக்க வேண்டும்.

மூத்த அதிகாரிகளும், இளையவர்களுடன் களத்துக்கு சென்று ஆய்வு செய்ய தயாராக வேண்டும். அனைவரும்தங்களுக்குரிய வயர்லெஸ் கருவிகளைக் கொண்டிருக்க வேண்டும். போலீஸாரும் உடன் தேவையான பணிகளை மேற்கொள்வார்கள். பேரிடர் மேலாண்மை துறை செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்றார் கிரண்பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com