அணுகுண்டு சோதனை: வடகொரியாவுக்கு விளாடிமிர் புதின் கடும் கண்டனம்

வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அணுகுண்டு சோதனை: வடகொரியாவுக்கு விளாடிமிர் புதின் கடும் கண்டனம்

வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி வட கொரியா 6வது முறையாக ஹைட்ரஜன் குண்டை சோதித்து பார்த்துள்ளது. இதனை அந்நாடும் உறுதி செய்துள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக, அந்நாட்டு தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.  மேலும் சோதனை நடத்த அதிபர் உத்தரவிட்டதற்கான கடித நகலையும் தொலைக்காட்சியில் காட்டினர். 

இந்த ஹைட்ரஜன் குண்டு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையில் பொருத்தப்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் தொலைபேசியில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும், சர்வதேச சட்டங்களையும் மீறி வடகொரியா செயல்பட்டு வருவதாகவும், இதனால் கொரிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இந்த விவகா‌ரத்தில் சர்வதேச நாடுகள் உணர்ச்சிவசப் படாமல் அமைதியான முறையில் செயல்பட வேண்டும் என்றும், அரசியல் ரீதியாக பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com