நீட் விலக்கு பெற தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்தேன்: நிர்மலா சீதாராமன் விளக்கம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தேன் என்று மத்திய பாதுகாப்புத்துறை
நீட் விலக்கு பெற தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்தேன்: நிர்மலா சீதாராமன் விளக்கம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தேன் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சண்முகம் (54). இவரது மகள் அனிதா(17).

பிளஸ் 2 தேர்வில் அனிதா 1200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் இவர் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது மருத்துவ கட் ஆப் மதிப்பெண் 196.75 ஆகும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்திருந்தால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

இந்நிலையில், நீட் தேர்வு காரணமாக எம்.பி.பி.எஸ். சேர முடியாமல் விரக்தியில் தற்கொலை மாணவி அனிதார் கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதையும் போராட்டக்களத்துக்கு கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக இந்திய அளவில் தற்போது எதிர்ப்பு குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மாநில அரசுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தேன்  என்று தெரிவித்துள்ளார்.
விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் நீட் தேர்வு குறித்து குழப்பத்தின் உச்சத்தில் இந்தபோது, தமிழகத்தில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்ததையடுத்து  முதல்வர் பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து அவசர சட்ட வரைவு தயார்செய்து கொண்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக  தில்லிக்கு கொண்டு சேர்த்தனர்.

இருப்பினும் நீட் தேர்வுக்கு விலக்க அளிக்கப்படவில்லை. இதையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள், 'மத்திய அரசின் பொய் வாக்குறுதியால்தான் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்று குற்றம் சாட்டின.

இந்நிலையில், மாணவி அனிதா இறந்தது நம் எல்லோருக்கும் ஒரு மிகப் பெரிய இழப்பு. ஏழை குடும்பத்தில் இருந்து வந்து அவ்வளவு திறமையோடு படித்தும் தற்கொலை செய்து கொண்டார் என்றால் அதைவிட ஒரு பெரிய இழப்பு இருக்கவே முடியாது.

நீட் விலக்கு கோரும் மாநில அரசின் அவசரச் சட்டத்துக்கு என்னால் முடிந்த அத்தனை உதவியையும் செய்து கொடுத்தேன். நீட் என்பது ஒரே நாளில் அமல்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த மாணவி இறந்தது குறித்து நாம் எல்லோரும் ஒன்றாக கூடி பேசலாம்.

ஆனால், வீணாக பழி போடும் அரசியலை இங்கே செய்ய வேண்டாம். நீட் தேர்வு விலக்குக்கான ஒவ்வொரு கட்டத்திலும் மாநில அரசுக்கு முழு ஆதரவு கொடுத்தோம் என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com