நிர்வாக முறைக்கு எதிரான நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை நிறுத்தி வைப்பு: வேலூர் சி.எம்.சி.

நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை நிர்வாக முறைக்கு எதிரானது என்பதால் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையை வேலூர் சி.எம்.சி.
நிர்வாக முறைக்கு எதிரான நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை நிறுத்தி வைப்பு: வேலூர் சி.எம்.சி.

வேலூர்: நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை நிர்வாக முறைக்கு எதிரானது என்பதால் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையை வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.

நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு நீதி கேட்டு மாணவர்கள் அமைப்பினர், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் தமிழகம் முழுவதும் போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  

இந்நிலையில், வேலூர் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 100 இடங்கள் உள்ளன. இதில் 85 இடங்கள் சிறுபான்மையினருக்கானது. மீதியுள்ள 15 இடங்கள் பொதுப்பிரிவினருக்கானது. சிறுபான்மையினர் கோட்டாவில் சேர்க்கப்படும். இதுவரை, மறைந்த ராணுவ வீரர் ஒருவரின் மகன் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் உயர் மருத்துவ படிப்பிலும் ஒருவர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். எஞ்சிய இடங்கள் நிரப்பப்படவில்லை.

அதாவது வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நிர்வாகத்தால் சேர்க்கப்படும் மாணவர்கள், தங்களது படிப்பு முடிந்த பின்னர் சி.எம்.சி. நிர்வாகத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்பது நிர்வாகத்தின் விதிமுறை. இதன்படி இதுவரை 90 சதவீத மாணவர்கள் இந்த சேவையை செய்து வருகின்றனர்.

ஆனால், தற்போதைய நீட் தேர்வின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை என்பது தங்களது நிர்வாகத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற நிர்வாக முறைக்கு எதிரானது என்பதால் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைப்பதாக வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com