இந்தியா -மியான்மர் இடையே 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சீனாவின் ஜியாமென் நகரில் 3 நாள்கள் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற மோடி, செவ்வாய்க்கிழமை அங்கிருந்து மியான்மருக்குச் சென்றார். 
இந்தியா -மியான்மர் இடையே 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சீனாவின் ஜியாமென் நகரில் 3 நாள்கள் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற மோடி, செவ்வாய்க்கிழமை அங்கிருந்து மியான்மருக்குச் சென்றார். 

மியான்மரில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்நாட்டு அதிபர் ஹிடின் கியாவைச் சந்தித்த மோடி, அந்நாட்டு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அரசியல் ஆலோசகர் ஹங்சான் சூச்சியை சந்தித்து பேசினார். மியான்மரில் உள்ள நேபிதாவ் நகரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இருநாடுகளின் உறவை மேற்படுத்துவது தொடர்பாக மோடி அந்நாட்டு அதிபர் ஹதின் கியாவ் ஆலோசகர் ஹங்சான் சூச்சி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வர்த்தகம், பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, உள்கட்டமைப்பு, எரிசக்தி, நிதி முதலீடு ஆகியவை முக்கிய அம்சமாக இடம் பெற்றதாக தெரிகிறது. மேலும் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த சந்திப்பின்போது 11 ஒப்பந்தங்கள் கையெழுப்பமாகின. மருத்துவம், பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப விரிவாக்கம் சம்பந்தமான ஒப்பந்தங்களும் கையொப்பம் ஆகி உள்ளது.

மியான்மரில் மகளிர் போலீஸ் பயிற்சி மையம் அமைப்பதற்காகவும் ஒரு ஒப்பந்தத்தில் இரு நாட்டு தலைவர்களும் கையொப்பமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com