சக மாணவியைத் தவறாக பேசியதால் கண்டித்த பள்ளி நிர்வாகம்: தற்கொலை முடிவெடுத்த மாணவன்!!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்னை இரண்டு ஆசிரியர்களும், துணை முதல்வரும் அடித்ததால் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
சக மாணவியைத் தவறாக பேசியதால் கண்டித்த பள்ளி நிர்வாகம்: தற்கொலை முடிவெடுத்த மாணவன்!!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்னை இரண்டு ஆசிரியர்களும், துணை முதல்வரும் அடித்ததால் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து கடந்த செவ்வாய் கிழமை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

17 வயதான இவர் தன்னுடன் பயிலும் சக மாணவியைப் பற்றி தவறான கருத்துக்களை அந்தப் பெண் அமரும் மேசையில் எழுதியிருக்கிறார். இது குறித்த புகாரை வகுப்பு ஆசிரியர்களிடம் அந்தப் பெண் தெரிவிக்க, இரண்டு ஆசிரியர்கள் இந்த மாணவனைப் பள்ளி துணை பேராசிரியரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். தவறை கண்டிக்கும் நோக்கில் இவர்கள் மூவரும் மாணவனைத் திட்டியும் அடித்தும் உள்ளனர். 

மேலும் பள்ளி துணை பேராசிரியர் உன் பெற்றோர்களை அழைத்து வந்து உன்னுடைய ‘டிசி’யை பெற்றுக்கொள் என்று கூறியுள்ளனர். வீட்டிற்குச் சென்ற மாணவன் தன் தந்தையைத் தொலைப்பேசியில் அழைத்து தன்னை ஆசிரியர்கள் அடித்து அவமானப் படுத்திவிட்டதாகவும் அதனால் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் மட்டும் தெரிவித்து வீட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் உடலின் பல இடங்களில் எலும்பு முரிவுடன் தப்பித்துள்ளார் அந்த மாணவன்.

காவல் துறையினர் இதுபற்றி கூறுகையில், “மாணவன் பள்ளியில் நடந்தது குறித்து பெற்றோர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்கிற பயத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாணவனின் மீது இந்திய குற்றவியல் சட்டம் 324 கீழ் தற்கொலைக்கு முயற்சித்ததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் துணை பேராசிரியர் மீதும் சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார், ஆனால் இதுவரை இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com