பசு மாட்டுக்கு வளைகாப்பு நடத்திய விவசாயி!

கோயம்பத்தூரை சேர்ந்த விவசாயி கிஷோர் குமார் என்பவர் கற்பமாக இருக்கும் தன் வீட்டுப் பசு மாட்டிற்கு வளைகாப்பு நடத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பசு மாட்டுக்கு வளைகாப்பு நடத்திய விவசாயி!

கோயம்பத்தூரை சேர்ந்த விவசாயி கிஷோர் குமார் என்பவர் கற்பமாக இருக்கும் தன் வீட்டுப் பசு மாட்டிற்கு வளைகாப்பு நடத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

நாட்டு மாடுகள் அழிந்து வரும் சூழலில் இருக்கும் நிலையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாலயத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தான் வளர்க்கும் நாட்டு மாடு கருவுற்று 9 மாதம் ஆகியுள்ளதை அடுத்து ஊர்க்காரர்கள், உறவினர்களை எல்லாம் அழைத்து விமர்சையாக வளைகாப்பு சடங்குகளை செய்துள்ளார்.

புரோகிதர் வந்து மந்தரங்கள் ஓதி, மாட்டிற்குத் திலகம் இட்டு, அதன் கொம்பில் வண்ண வண்ண கண்ணாடி வளையல்கள் அணிவித்து, கால்களில் வெள்ளிக் கொலுசு போட்டு, பட்டுப் புடவை சாத்தி அனைத்துச் சீர்களையும் செய்துள்ளது அந்த விவசாயி குடும்பம். சமீபத்தில் இதைப் போன்று ஆந்திராவில் உள்ள திருப்பதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த தன் வீட்டுப் பசு மாட்டிற்குச் சீமந்தம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

வளைகாப்பில் கலந்து கொண்டவர்களுக்குத் தடபுடலாக 11 வகையான உணவுகளுடன் விருந்தும் அழித்துள்ளார். வந்தவர்கள் அனைவரும் பசு மாட்டைத் தெய்வமாக வணங்கியதோடு, நல்லபடியாக பேரு காலம் அமைய வாழ்த்திச் சென்றுள்ளனர். மக்கள் இடையே நாட்டு மாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த விழாவை நடத்தியதாக விவசாயி கிஷோர் கூறியுள்ளார். மாடுகள் மீது இவர் வைத்துள்ள பாசம் அனைவரையும் சிலிர்க்க வைக்கிறது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com