குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

நர்மதா நதி மீது கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

நர்மதா நதி மீது கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். .இதையொட்டி குஜராத்திற்கு வந்த அவர், தனது தாயார் ஹிராபாயை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து, நர்மதை ஆற்றின் குறுக்கே ரூ.16,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த அணை உலகின் 2வது மிகப்பெரிய அணையாகும். அண்மையில் இந்த அணையின் நீர்மட்டம் 138 புள்ளி 68 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 4 புள்ளி 73 மில்லியன் கனமீட்டர் நீரை இது சேமிக்கக்கூடியது. 

கடந்த 1961ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் அடிக்கல்

நாட்டப்பட்டது சர்தார் சரவோர் அணை. நர்மதா நதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி பல லட்சம் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டம் 56 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

பணிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் சர்தார் சரோவர் அணை பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இது குறித்து தமது ட்விட்டரில் பதிவு செய்துள்ள மோடி பல லட்சம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை இத்திட்டம் பூர்த்தி செய்யும் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com