6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த "பேட்' எங்கே?

2007-இல் 720 உலக கோப்பை போட்டி, தென்னாப்பிரிக்காவில் நடந்தது. அப்போது ஒருநாள் இரவு டின்னரில் லலித் மோடியும், யுவராஜ் சிங்கும் சந்தித்தனர்
6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த "பேட்' எங்கே?

2007-இல் 720 உலக கோப்பை போட்டி, தென்னாப்பிரிக்காவில் நடந்தது. அப்போது ஒருநாள் இரவு டின்னரில் லலித் மோடியும், யுவராஜ் சிங்கும் சந்தித்தனர். அப்போதெல்லாம் இந்திய கிரிக்கெட்டர்களுக்கு, இன்று கிடைப்பது போல் சன்மானம் கிடையாது.

இதனால் யுவராஜ் சிங் பேச்சோடு பேச்சாக, லலித் மோடியிடம், "எனக்கு ஒரு போர்ஷே (Porsche) கார் வாங்க ஆசை எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்ட லலித்மோடி, "நாளை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்சர் அடியுங்கள்... நான் போர்ஷே காரை உனக்கு வாங்கித் தருகிறேன்'' எனக் கூறியுள்ளார்.  அடுத்த நாள் நிஜமாகவே யுவராஜ் சிங்; 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து விட்டார்.

இது நடந்து ஒரு மாதம் கழித்து ஜெய்ப்பூரில், ஒரு மேட்ச்சில் பங்கேற்க யுவராஜ்சிங் வந்திருந்தார்.  இதற்கு முன்பே யுவராஜ்சிங், எந்த பேட்டை வைத்து 6 சிக்ஸர்கள் அடித்தாரோ அதனை மோடியின் மகன் ருசிர் மோடியிடம் கொடுத்துவிட்டார்!

தந்தை லலித் மோடியும், கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, யுவராஜ்சிங்கிற்கு ஒரு போர்ஷேயை வாங்கிக் கொடுத்து விட்டார்.

யுவராஜ் சிங் கொடுத்த பேட்டை, லலித் மோடியின் மகன் ருசிர் மோடி இன்று வரை தன்னுடைய படுக்கையறையில் வைத்துப் பாதுகாத்து வருகிறார்..!!  
- தகவல்களைக் கூறியது ருசிர் மோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com