மோடிக்கு எதிராக மணிஷ் திவாரி டுவிட்டரில் தெரிவித்த கருத்தால் சர்ச்சை

மகாத்மா காந்தியால் கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசபக்தியை போதிக்க முடியாது என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ்
மோடிக்கு எதிராக மணிஷ் திவாரி டுவிட்டரில் தெரிவித்த கருத்தால் சர்ச்சை

துதில்லி: மகாத்மா காந்தியால் கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசபக்தியை போதிக்க முடியாது என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி முட்டாள்களை பக்தர்களாக மாற்றுவதாகவும் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பக்தர்களை முட்டாள்கள் என்று கருத்து தெரிவித்த மணிஷ் திவாரிக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் தேசிய கீதம் ஒலிக்கும் போது பிரதமர் நடந்து சென்றது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது இவ்வாறு மணிஷ் திவாரி சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார். ஆனால் சில மணி நேரம் முன்புதான் அவர் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் கூறியிருந்தார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பிசி சகோ கூறுகையில், "யாரும் ஆட்சேபிக்க முடியாத மொழியைப் பயன்படுத்தி யாரையும் மௌனமாக்க முடியும் என்று அர்த்தமல்ல, எல்லோரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகக் கூற முடியாது. இந்த நாட்டில் இனவாத ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஊடுருவி, இந்த நாட்டில் வகுப்புவாதத்தை பரப்புவதாகவும கூறவில்லை, ஆனால் அவர் ஆட்சேபிக்கக்கூடிய மொழியைப் பயன்படுத்துகின்ற ஒரு நபராக இருப்பதாக நான் நினைக்கவில்லை" என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியை தாக்கும் என்று எந்த கருத்தையும் டுவிட் செய்யவில்லை என்று நேற்று மாலை விளக்கம் தெரிவித்திருந்தார் மணிஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com