செளபாக்கியா யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

செளபாக்கியா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்பதை உறுதி செய்யும் திட்டம்
செளபாக்கியா யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

செளபாக்கியா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்பதை உறுதி செய்யும் திட்டம் செளபாக்கியா யோஜனா திட்டம். தீன்தயாள் உபாத்யாயா வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செளபாக்கியா யோஜனா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பாரதிய ஜனசங்கத்தின் தலைவராக 1953 முதல் 1968 வரை பதவி வகித்தவர். அவருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் செளபாக்கியா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரூ.500 செலுத்தி மின் இணைப்பை பெறலாம்; 10 மாத தவணையில் தொகையை செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்கு மாற்று மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவைகளை ஒருங்கிணைத்து ஒரே திட்டமாக செளபாக்கியா யோஜனா திட்டம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


2011 சமுக பொருளாதார கணக்கெடுப்பின் படி பயனாளர்கள் கணக்கிடப்படுவார்கள். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரிகள் உரியவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற வேண்டும். மொத்த செலவினத்தில் 60% மத்திய அரசும், 10% மாநில அரசும் 30% கடனாகவும் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனை குழுவை பிரதமர் அமைத்துள்ளார்.  பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை பிரதமருக்கு இந்த குழு வழங்கும். ரூ.16,320 கோடி மதிப்பிலான புதிய திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com