காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் 10 நாளில் தள்ளுபடி செய்யப்படும்: ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் 10 நாளில் தள்ளுபடி செய்யப்படும். தேவைப்படும்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் 10 நாளில் தள்ளுபடி செய்யப்படும்: ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் 10 நாளில் தள்ளுபடி செய்யப்படும். தேவைப்படும் நேரத்தில் மக்களுக்கு மிக எளிய முறையில் வங்கி கடன்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார். 

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இப்போதே தயாராகி வருகிறது. அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்த மாநிலத்தின் சௌராஷ்டிரா மண்டலத்தில் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் சாலை வழி பிரசாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

தொழிலதிபர்கள் 15 பேரின் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். குஜராத்தில் அவரது சகாக்களும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே உதவி செய்கின்றனர். பொதுமக்கள் வேலையில்லா திண்டாட்டத்தால் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் 10 நாளில் தள்ளுபடி செய்யப்படும். தேவைப்படும் நேரத்தில் மக்களுக்கு மிக எளிய முறையில் வங்கி கடன்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

காங்கிரஸ் மூன்று இலக்குகளை முக்கியமாக கருதுகிறது. சீனாவுடனான போட்டி, சிறு வணிகர்களுக்கு உதவி செய்தல் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகிய இலக்குகளை அடையும் வகையில் செயல்படும் என்று அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com