போர் பதற்றம்: மலேசிய மக்கள் வடகொரியா செல்ல தடை!

வடகொரியாவில் போர் பதற்றம் நிலவி வருவதால் மலேசியாவை சேர்ந்த குடிமக்கள் வடகொரியாவிற்கு செல்வதற்கு மலேசிய அரசு

கோலாலம்பூர்: வடகொரியாவில் போர் பதற்றம் நிலவி வருவதால் மலேசியாவை சேர்ந்த குடிமக்கள் வடகொரியாவிற்கு செல்வதற்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது.

வடகொரியா அணு ஆயுத திட்டத்தையும், ஏவுகணை திட்டத்தையும் கை விட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் அழுத்தம் தந்து வருகின்றன. ஆனால் வடகொரியா இதில் விட்டுக் கொடுக்காமல், தனது அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றுவதில் விடாப்பிடியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டபோதும், வடகொரியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவிவருகிறது. 

இந்நிலையில், தன் நாட்டு மக்கள், வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு மலேசிய அரசு அதிரடியாக தடை விதித்து நேற்று வியாழக்கிழமை உத்தரவு போட்டுள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்த தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என மலேசிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தடை உத்தரவு காரணமாக வரும் 5 -ஆம் தேதி பியோங்யாங்கில் நடைபெற இருந்த மலேசியா மற்றும் வடகொரியா இடையேயான ஆசிய கோப்பை தகுதி கால்பந்து போட்டி பாதிப்புக்குள்ளாகும் என தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே, பாதுகாப்பு பிரச்னைகள் காரணமாக இரண்டு முறை பயணத்தில் தடை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com