நடிகைகளுடன் கற்பனையாக பாலியல் உறவு வைத்துக்கொள்வதை பதிலாக 12-ம் வகுப்பு பொது தேர்வில் எழுதிய மாணவன் தேர்ச்சி!

குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன், தேர்வில் பொருளாதார பரீட்சையில் சில கேள்விகளுக்கு பதிலாகத் தான் பாலிவுட் கதாநாயகிகளுடன் பாலியில் உறவு வைத்துக் கொள்ளவதை கற்பனையாக எழுதியுள்ளான்
நடிகைகளுடன் கற்பனையாக பாலியல் உறவு வைத்துக்கொள்வதை பதிலாக 12-ம் வகுப்பு பொது தேர்வில் எழுதிய மாணவன் தேர்ச்சி!

குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன், பொதுத் தேர்வில் பொருளாதார பரீட்சையில் சில கேள்விகளுக்கு பதிலாகத் தான் பாலிவுட் கதாநாயகிகளுடன் பாலியில் உறவு வைத்துக் கொள்ளும் முறையைக் கற்பனையாக எழுதியுள்ளான். அந்த விடைத்தாளைத் திருத்திய ஆசிரியரும் அந்தப் பதில்களுக்கு மதிப்பெண் வழங்கி அந்த மாணவனைத் தேர்வில் தேர்ச்சி பெற செய்துள்ளார்.

14 மதிப்பெண் கேள்விகளுக்கு அந்த மாணவன் பாலிவுட் நடிகைகளான ராணி முகர்ஜி மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் கற்பனையாக எப்படியெல்லாம் உடலுறவு வைத்துக்கொள்வேன் என்று பதில் எழுதியுள்ளான். திருத்திய ஆசிரியரும் கவனக்குறைவுடன் அந்தப் பதில்களை சரியாகப் படிக்காமல் மதிப்பெண்ணை வழங்கி 36 மதிப்பெண்ணுடன் பொருளாதார பரீட்சையில் அந்த மாணவனைத் தேர்ச்சி பெறவும் செய்துவிட்டார். விடைத்தாள்களைச் சரிபார்க்கும் அதிகாரி அந்தப் பதில்களை படித்தும், அதற்கு ஆசிரியர் வழங்கியிருக்கும் மதிப்பெண்ணைப் பார்த்தும் அதிர்ந்துள்ளார். 

பின்னர் அந்த விடைத்தாளை மறு ஆய்வு செய்து 14 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. கவனக்குறைவுடன் விடைத்தாளைத் திருத்திய அந்த ஆசிரியருக்கும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில மேல்நிலைக் கல்வி வாரியத்தின் துணை தலைவரான ஆர்.தக்கர் இதுகுறித்து கூறுகையில் “இந்த ஆண்டு மட்டும் 1000 ஆசிரியர்களிடமிருந்து இவ்வாறு விடைத்தாள் திருத்தம் மற்றும் மதிப்பெண் கூட்டலில் தவறு செய்ததற்காக 10 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் இந்தத் தேர்வு முடிவுகளில் ஆசிரியர்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வது எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு செயலாகும். இந்தச் சம்பவத்தை போன்றே குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவன் வேதியியல் பாடத் தேர்வில் கற்பனையாகச் சினிமா நடிகைகள் மட்டும் இல்லாமல், தன் அண்ணி மற்றும் வீட்டுச் சமையல் செய்யும் பெண்ணுடன் தான் பாலியல் உறவு வைத்துக்கொள்வதைப் பதிலாக எழுதியுள்ளான். பிறகு இந்த விடைத்தாளும் சரிபார்க்கப்பட்டு அந்த மாணவனின் மதிப்பெண்களும் குறைக்கப்பட்டன.

இது ஆசிரியர்கள் மற்றும் அவர்களது கவனக்குறைவான செயல்களைப் பற்றி யோசிக்க வேண்டிய விஷயம் மட்டுமில்லை, ஒரு பொது தேர்வில் அதுவும் சுமார் 17 வயது மாணவர்களை இவ்வாறு அவர்களது வயதிற்கும் மீறிய விஷயங்களைச் சிந்திக்க தூண்டுவது எது? அவர்கள் வாழ்க்கை தடம் மாறுவதற்கான காரணமாக அமைவது என்ன? இதை எப்படிச் சரி செய்வது? என்பதும் நாம் யோசிக்க வேண்டிய ஒரு பிரதான பிரச்னைதான்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com