நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக தயார்: காங்கிரஸ் ஆதரிக்க தயாரா?- தம்பிதுரை

ஜல்லிக்கட்டுக்காக மக்கள் போராடி வெற்றி பெற்றதை போல் காவிரிக்காகவும் மக்கள் இயக்கமாக மாறி போராட வேண்டும் என்று மக்களவை
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக தயார்: காங்கிரஸ் ஆதரிக்க தயாரா?- தம்பிதுரை

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக மக்கள் போராடி வெற்றி பெற்றதை போல் காவிரிக்காகவும் மக்கள் இயக்கமாக மாறி போராட வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வாரங்கள் கெடு விதித்தும் அதை நிறைவேற்றவில்லை. கடைசி நேரத்தில் உச்சநீதிமன்றம் அறிவித்த திட்டம் என்றால் என்ன என்று சந்தேகம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற 3 மாதங்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின் குரல் தொடர்ந்து ஒலிக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அவையை நடத்தவிடமாட்டோம்.

காவிரி விவகாரத்தில் மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு அதிமுக தயாராக உள்ளது. அவ்வாறு கொண்டு வரும்போது அதை காங்கிரஸ் ஆதரிக்குமா என்று கேள்வி எழுப்பியதுடன் ஸ்டாலின் வேண்டுகோள்படி காவிரி விவகாரத்திற்காக காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார்.

மேலும் காவிரி விவகாரத்தில் அனைத்து மக்களும் இணைந்து, கட்சி பாகுபாடு பார்க்காமல் மக்கள் நலனை மட்டும் கருதி மக்கள் இயக்கமாக மாறி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். ஜல்லிக்கட்டுக்காக தன்னெழுச்சியாக கொதித்து எழுந்த லட்சக்கணக்கில் மக்கள் கூடி எப்படி போராடினார்களோ, அதுபோன்று  காவிரி விவகாரத்திற்காகவும் போராட வேண்டும். அதிமுகவுக்கு என்று தனிக்கொள்கை உள்ளது. மக்கள் நலனுக்காக செயல்படும் அரசு அதிமுக அரசு.

அரசியலுக்காகவே திமுக போராட்டம் அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை நாடாளுமன்றத்தில் எங்களுடையை போராட்டம் தொடரும். மாநில அரசு வேறு, மத்திய அரசு வேறு. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றார் தம்பிதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com