பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிக்கு ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிக்கு ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா உறுதி செய்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி நாட்டின் மிகச்சிறந்த சுபி மத இசைக்கலைஞர்களில் ஒருவரான அம்ஜத் சப்ரி சுட்டுக் கொல்லப்பட்டவர்களும் இதில் அடங்குவர்.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பாதுகாப்பு படையினருடனும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு 62 பேரைக் கொன்ற 10 பயங்கரவாதிகளுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தன. 

அந்த பயங்கரவாதிகள், முகமது இஸ்டாக், முகமது ரபீக், முகமது ஆரிஷ், ஹபிபுர் ரகுமான், முகமது பயஸ், இஸ்மாயில் ஷா, முகமது பசல், ஹஸ்ரத் அலி, முகமது ஆசிம், ஹபிபுல்லா ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

முகமது இஸ்டாக்கும், முகமது ஆசிமும் சேர்ந்து பாகிஸ்தானின் மிகச்சிறந்த சுபி மத இசைக்கலைஞரான அம்ஜத் சப்ரியையும், சட்ட அமலாக்கல் பிரிவினர் மற்றும் ஆயுதப்படைகள் மீது நடத்திய தாக்குதலில் 17 அதிகாரிகளை கொன்றவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இவர்களுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்படுவதாக அறிவித்தது. மரண தண்டனையை அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா உறுதி செய்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி பாகிஸ்தானின் மிகச்சிறந்த சுபி மத இசைக்கலைஞரான அம்ஜத் சப்ரி காரில் சென்றுகொண்டிருந்த போது இரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சுட்டுக் கொன்றனர். சப்ரி மீதான தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் ஹக்கிமுல்லா மசூத் குழு பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள 10 பயங்கரவாதிகளும் எந்த நேரத்திலும் தூக்கில் போடப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com