பேராசிரியர் வேலைக்கு காத்திருப்பவர்களா நீங்கள்? அழைக்கிறது சென்னை ஐஐடி

சென்னையில் ஐஐடியில் நிரப்பபப்பட உள்ள உதவி பேராசாரியர், பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் வேலைக்கு காத்திருப்பவர்களா நீங்கள்? அழைக்கிறது சென்னை ஐஐடி

சென்னையில் ஐஐடியில் நிரப்பபப்பட உள்ள உதவி பேராசாரியர், பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
விளம்பர எண். IITM/R/2/2018 

பணி: Assistant Professor Grade-I 
சம்பளம்: மாதம் ரூ.140669

பணி: Assistant Professor Grade-II 
சம்பளம்: மாதம் ரூ.100583 

பணி: ASSOCIATE PROFESSOR
சம்பளம்: மாதம் ரூ.190580 

பணி: PROFESSOR 
சம்பளம்: மாதம் ரூ.216125 

காலியிடங்கள் உள்ள துறைகள்: ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங், உயிரி தொழில்நுட்பம், வேதியியல், கணினி அறிவியல் மற்றும் என்ஜினியரிங், என்ஜினியரிங் டிசைன், மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், மெக்கானிக்கல், ஓஷியன், அப்ளைடு மெக்கானிக்ஸ், கெமிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல், கணிதம், மெட்டலர்ஜிக்கல் மற்றும் மெட்டிரியல்ஸ், இயற்பியல் உள்ளிட்ட துறைகள்.

தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் முனைவர் பட்டம் (பி.எச்.டி) அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்போர் 3 ஆண்டுகளும், இணைப் பேராசிரியர் பணிக்கு 6 ஆண்டுகளும், பேராசிரியர் பணிக்கு 10 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: facapp.iitm.ac.in என்ற இணையதளத்துக்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், விண்ணப்பத்தை மட்டும் பிரிண்ட் அவுட் எடுத்து அதில் கையொப்பமிட்டு Dean (Administration) IIT Madras Chennai 600 036 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://facapp.iitm.ac.in/2018b/sites/default/files/R218-Advertisment.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com