சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி திடீர் இடமாற்றம்

ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும்
சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி திடீர் இடமாற்றம்

ஜோத்பூர்: ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது, அரியவகை மான்களை வேட்டையாடிதாக ஹிந்தி நடிகர் சல்மான் கான், சைப் அலி கான், தபு, சோனாலி, பிந்த்ரே, நீலம் உள்ளிட்ட 5 பேர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜோத்பூர் முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

மேலும் இந்த வழக்கில் துஷ்யந்த் சிங் என்ற உள்ளூர்வாசியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் கடந்த மாதம் 28-ந்தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்தார். பின்னர் இந்த வழக்கில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஹிந்தி திரையுலக நட்சத்திரங்கள் சைஃப் அலிகான், தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, சல்மான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சல்மான் கான் தனக்கு ஜாமீன் வழங்க தாக்கல் செய்த மனு மீது குற்றவியல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்த நீதிபதியை ராஜஸ்தான் அரசு திடீரென இடமாற்றம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மொத்தம் 87 நீதிபதிகளை இடமாற்றம் செய்துள்ளது. வழக்கமாக ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 30-ஆம்தேதி வரையில் ராஜஸ்தானில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவதும் வழக்கம். ஆனால், இம்முறை முன்கூட்டியே இடமாற்றம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com