நாட்டின் முதல் ஆயுஷ்மான் பார சுகாதார மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டம் ஜங்லாவில் 'ஆயுஷ்மான் பாரத்-தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்'கீழ்
நாட்டின் முதல் ஆயுஷ்மான் பார சுகாதார மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டம் ஜங்லாவில் 'ஆயுஷ்மான் பாரத்-தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்'கீழ் நாட்டின் முதல் சுகாதார மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூருக்கு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை ஜங்கலா பகுதியை வந்தடைந்தார். 

ஆயுஷ்மன் பாரத் யோஜானா திட்டத்தின் மூலம் பல்வேறு நோய்களுக்கான உயர்சிகிச்சை அளிக்க வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் ஒன்றரை லட்சம் சுகாதார மையங்களை அமைக்கும் மத்திய அரசின் நோக்கத்தின்படி, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நாட்டின் முதல் சுகாதார நிலையத்தையும், ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். ஜங்லா உள்பட 7 கிராமங்களில் வங்கிகளின் கிளைகளையும் அவர் திறந்து வைத்தார்.

குடும் நகரிலிருந்து பானுபிரதாப்பூர் நகர் வரை புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையையும் பயன்பாட்டுக்கு அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

பழங்குடியினர் அதிகமாக வாழும் பிஜப்பூர், நாரயண்பூர், பஸ்ட்டார், கான்கெர், கொன்டாகான், சுக்மா, டன்ட்டேவாடா ஆகிய 7 மாவட்டங்களுக்கு தொலைதூர கிராமங்களுக்கும் இணையச் சேவை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சத்தீஸ்கர் அரசு கொண்டுவந்துள்ள சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் நீளம்கொண்ட ஆப்டிக்கல் பைபர் இணைப்பின் பஸ்தார் இணைய முதல்கட்ட சேவையை தொடங்கி வைத்தார்.

மேலும் ரூ.1700 கோடி மதிப்பீட்டில் பாலங்கள், சாலைகள் அமைக்கும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்ச ஜே.பி.நட்டா, சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சத்தீஸ்கருக்கு நான்காவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com