சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை: பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகை செய்யும் மசோதாவை கொண்டு வருவதற்காக
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை: பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

ஸ்ரீநகர்: சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகை செய்யும் மசோதாவை கொண்டு வருவதற்காக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்துக்கு பரூக் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தின் ரசானா கிராமத்தில் 8 வயது முஸ்லீம் சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி 10}ஆம் தேதி காணாமல் போன நிலையில், ஒரு வாரத்துக்குப் பிறகு அவரின் வீட்டருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்த நிலையில், அச்சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எதிர்ப்புகள் வலுக்கவே சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, 8 பேரை கைது செய்தது. அதில், ஆதாரங்களை அழிக்க முயன்றதாக 2 காவல்துறை அதிகாரிகளும், ஒரு காவலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இன்று ஸ்ரீநகரில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலியல் பலாத்கார கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த அந்த சிறுமி எனது மகளைப் போன்றவள். தற்போது இதுதொடர்பாக நாடே இன்று விழித்தெழுந்து உள்ளதற்காக கடவுளுக்கு நன்றி. 

இதுபோன்ற சம்பங்கள் இனி நடந்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டத்தை இயற்றுவதற்காக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை நாம் அவசரமாக கூட்டியாக வேண்டும்.

இந்த சிறப்பு கூட்டத்தின்போது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகை செய்யும் மசோதாவை கொண்டுவந்து சட்டமாக நிறைவேற்றினால் அது எதிர்காலத்துக்கு மிகவும் நல்லதாக அமையும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை இந்த சட்டத்தால் தடுக்க முடியும் என அப்துல்லா கூறினார். 

சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளதாகவும், "இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு குழந்தையை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருவோம், என்று கடந்த வியாழக்கிழமை (ஏப் 12) டுவிட்டர் பதிவில் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com