காணாமல் போன ஜிசாட் - 6 ஏ செயற்கைகோள் இருப்பிடம் கண்டுபிடிப்பு: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

பருவநிலை மாற்றம் குறித்து அறிந்துகொள்ள சமீபத்தில் அனுப்பப்பட்ட ஜி.சாட்-6 ஏ செயற்கைகோளின் இருப்பிடம்
காணாமல் போன ஜிசாட் - 6 ஏ செயற்கைகோள் இருப்பிடம் கண்டுபிடிப்பு: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

திருநெல்வேலி: பருவநிலை மாற்றம் குறித்து அறிந்துகொள்ள சமீபத்தில் அனுப்பப்பட்ட ஜி.சாட்-6 ஏ செயற்கைகோளின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அதனுடன் தகவல் தொடர்பு இணைப்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல் முறையாக செயற்கைகோள் கண்காணிப்பு தகவல் சேகரிப்பு மையம் நெல்லை அரசு பொறியியல் கல்லூரிக்கு எதிரே உள்ள கடற்படைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட உள்ளது, ரூ.82 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட இஸ்ரோ தலைவர் சிவன் அடிக்கல்லை நாட்டினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த செயற்கைகோள் கண்காணிப்பு தகவல் சேகரிப்பு மையம் தென் பகுதியில் முதல் முறையாக அமைக்கப்பட உள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து அறிந்துகொள்ள சமீபத்தில் ஜி.எஸ்.எல்.வி. எப்.08 - ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைகோளான ஜி.சாட்-6 ஏ செயற்கை கோளின் டெலஸ்கோப் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதனுடன் தொலை தொடர்பு இணைப்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். விரைவில் தொலைதொடர்பை ஏற்படுத்திவிடுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும்,  ரோபோக்கள் பயன்படுத்தி நிலவில் இருந்து ஆய்வுகள் மேற்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டு வரும் சந்திராயன்-2 விண்ணுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் அனுப்பப்படும். கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உதவும் வகையில் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இதற்கான சிறப்பு கருவியுடன் புளு டூத் மூலம் இணைப்பதால் மீனவர்களின் இருப்பிடம், மீன்வளம் மற்றும் சர்வதேச எல்லைக்கான எச்சரிக்கை உள்ளிட்ட வசதிகளை மீனவர்கள் பெறமுடியும். 

இதனை சாதாரண பாமர மீனவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு கருவிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும் என சிவன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com