கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது

மே 12-ஆம் தேதி கர்நாடகா சட்டபேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.

பெங்களூரு: மே 12-ஆம் தேதி கர்நாடகா சட்டபேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. வருகிற  24 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் மே 12-ஆம்  தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று செவ்வாய்க் கிழமை (ஏப் 17) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இன்று தொடங்கும் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி வருகிற 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகும். தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 25-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 27-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 

இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com