பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் - நிஃப்டி உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  89.63 புளிகள் உயர்ந்து,
பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் - நிஃப்டி உயர்வு

மும்பை :  மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  89.63 புளிகள் உயர்ந்து, 34,395.06 புள்ளிகளாக இருந்தன. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 20.35 புள்ளிகள் உயர்ந்து, 10,548.70. புள்ளிகளாக இருந்தன. 

மின்சாரம், உலோகம், பொதுத்துறை நிறுவனம், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், மூலதன பொருட்கள் மற்றும் ஆட்டோ போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. பவர் கிரிட், எம் & எம், என்.டி.பி.சி, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், நிலக்கரி இந்தியா, டாக்டர் ரெட்டிஸ், அதானி துறைமுகங்கள் மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவன பங்குகள் விலை 3.27% வரை அதிகரித்து காணப்பட்டது.

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 65.62 ஆக இருந்தது. அதேபோல் பிற நாணயங்களின் மதிப்பு விவரம்: - 
ஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ. 81.44 ஒரு பிரிட்டன் பவுண்ட் ஸ்டெர்லிங் = ரூ. 94.30,  ஆஸ்திரேலியா (டாலர்)  =  ரூ. 51.10, கனடா (டாலர்)  =  ரூ. 52.25, சிங்கப்பூர் (டாலர்)  =  ரூ. 50.15, ஸ்வீஸ் ஃப்ராங்  = ரூ. 68.39, மலேசிய ரிங்கெட்  =  ரூ. 16.89, நூறு ஜப்பானிய யென் = ரூ. 61.36 சீன யுவான் ரென்மின்பி = ரூ. 10.44, பஹ்ரைன் தினார் =   ரூ. 174.54, ஹாங்காங் (டாலர்) =   ரூ. 8.36 குவைத் தினார் =   ரூ. 218.37

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com