வேலூரில் வரும் சனிக்கிழமை சிறப்பு பாஸ்போர்ட் முகாம்

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வேலுரில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் வரும் சனிக்கிழமை
வேலூரில் வரும் சனிக்கிழமை சிறப்பு பாஸ்போர்ட் முகாம்

வேலூர்:  சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வேலுரில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் வரும் சனிக்கிழமை (21.04.2018) அன்று சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடக்க உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவாவது: -

பொதுமக்களின் தேவையை நிறைவேற்றவும் அடிக்கடி பயணம் மேற்கொள்வோர் கால நீடிப்பு செய்வதற்கு நேரம் ஒதுக்கக்  கோருவதில் சிரமங்களைத் தவிர்த்து விண்ணப்பங்கள் அளிப்பதற்கும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

இந்த பாஸ்போர்ட் முகாமில் பங்கு பெற அனைத்து விண்ணப்பதாரர்களும் www.passportindia.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் பதிவு செய்து ஏ.ஆர்.என். (விண்ணப்பப் பதிவு எண்-ARN) உருவாக்கி இணையதளத்தின் வழியே உரிய கட்டணத்தைச் செலுத்தி பின்னர் சந்திப்பதற்கான நேரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த முகாமில் பங்கு பெறும் விண்ணப்பதாரர்கள் பார்வை நேரம் மற்றும் ஏ.ஆர்.என். விவரங்களை அச்சிட்ட வடிவத்தில் வேலூர் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்திற்குக் கொண்டு வர வேண்டும். தேவையான ஆவணங்களின் மூலங்களையும் சுயசான்று அளிக்கப்பட்ட இரண்டு நகல்களையும் கொண்டு வர வேண்டும். புதிய மற்றும்  மறுவெளியீட்டுக்கான வகையிலான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

21.04.2018 சனிக்கிழமை அன்று நடைபெறும் முகாமிற்கான சந்திப்பு நேர ஒதுக்கீடு 18.04.2018 (புதன்கிழமை) அன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் முகாம் நாளன்று அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேர அடிப்படையில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். நேர்காணலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மற்றும்  நிராகரிக்கப்பட்டுள்ள டோக்கன்கள் இந்த முகாமின்போது பரிசீலிக்கப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இந்த முகாமின் மூலம் சுமார் 120 விண்ணப்பதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com