அணு ஆயுத சோதனை நிறுத்தி வைப்பு: வடகொரியா அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு

அணு ஆயுத சோதனை நிறுத்தப்படும் என்ற வடகொரியாவின் நல்ல தகவலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு
அணு ஆயுத சோதனை நிறுத்தி வைப்பு: வடகொரியா அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு

வாஷிங்டன்: அணு ஆயுத சோதனை நிறுத்தப்படும் என்ற வடகொரியாவின் நல்ல தகவலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா. தடையையும் மீறி அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பரிசோதித்து வந்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தன

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் விருப்பம் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து வட கொரியா, தென் கொரியா இடையே பதற்றம் குறைந்து அமைதியான சூழல் தற்போது உண்டாகியுள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜோங்கை முதல்முறையாக இன்னும் சில வாரங்களுக்குள் நேரடியாக சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளனர். இருவரது சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை இன்றுடன் நிறுத்தபோவதாகவும், அணு ஆயுத சோதனை தளத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளதாக அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்தார். 

இந்நிலையில், அணு ஆயுத சோதனை நிறுத்திவைக்கப்படும் என்ற வடகொரியாவின் அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்து உள்ளார். கிம் ஜோங் இன்று அறிவித்துள்ள நல்ல தகவல் வடகொரியாவுக்கு மட்டுமின்றி அல்லாது உலக வளர்ச்சிக்கு உதவும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com