ஏப்ரல் 27-ல் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: சீனா உறுதி

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27ஆம் தேதி சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார் என சீனா தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 27-ல் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: சீனா உறுதி

பிய்ஜீங்: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27ஆம் தேதி சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார் என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வாஹூன் நகரில் ஏப்ரல் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். இருதரப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என தெரிகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இன்று ஞாயிற்றுக்கிழமை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் குறித்தும் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ஏப்ரல் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு வெற்றி பெறும் உறுதியாக நம்புகிறோம் என வாங் யீ தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது இருதரப்பு உறவு உள்ளிட்ட முக்கிய பிரச்சனை குறித்து இரு தலைவர்களும் பேச உள்ளதாகவும், இந்த சந்திப்பு இரு நாடுகளின் உறவுகளில் ஒரு மைல்கல் என்று நிரூபிக்கும் என்று வாங் கூறினார். 

கடந்த வாரம் திங்கள்கிழமை ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக, ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் உறவை பலப்படுத்துவது மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com