ஜூடோ சாம்பியன்ஷிப்: 10 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா சாதனை!

நேபாளத்தில் நடைபெற்ற 8-ஆவது தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. 
ஜூடோ சாம்பியன்ஷிப்: 10 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா சாதனை!

நேபாளத்தில் நடைபெற்ற 8-ஆவது தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. 

நேபாளத்தின் லலித்பூர் நகரில் 8-ஆவது தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 21ந்தேதி தொடங்கின.  இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் விளையாடின.

லலித்பூர் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் மகளிர் பிரிவில் 4 தங்கமும், ஆடவர் பிரிவில் 2 வெண்கலமும் இந்தியா வென்றது. இதில் மகளிருக்கான 48 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சுஷிலா தேவி-பாகிஸ்தானின் ஹுமைரா ஆஷிக்கை வீழ்த்தினார். அதேபோல், 52 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் கல்பனா தேவி தெளடம்-பாகிஸ்தான் வீராங்கனை மரியமை வென்றார்.

57 கிலோ எடைப் பிரிவில் அனிதா சானு-நேபாளத்தைச் சேர்ந்த லீலா அதிகாரியை தோற்கடித்தார். 63 கிலோ எடைப் பிரிவில் சுனிபாலா தேவி-நேபாளத்தின் லாமு கத்ரியை வீழ்த்தினார்.

இந்நிலையில், இதவரை நடந்துமுடிந்த போட்டிகளில் மொத்தம் 14 தங்கப்பதக்கங்களில், இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 10 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளனர். அவற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 7 தங்கம் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3 தங்கம் என 10 தங்க பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது. 3 வெண்கல பதக்கங்களையும் வென்று மொத்தம் 13 பதக்கங்களுடன் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

தொடர்ந்து நேபாளம் 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கங்களுடன் 21 பதக்கங்களை பெற்றுள்ளது. பாகிஸ்தான் 2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதேபோன்று இலங்கை 3 தங்கம் மற்றும் 5 வெண்கல பதக்கங்களும், அதனை தொடர்ந்து வங்காளதேசம் 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களையும் கைப்பற்றி உள்ளன. பூடான் ஒரு வெண்கல பதக்கம் பெற்றுள்ளது.

ஏப்ரல் 21 முதல் தொடங்கும் சாம்பியன்ஷிப் எட்டாவது பதிப்பு ஏப்ரல் 23 அன்று முடிவடையும். (ANI)

ஏப்ரல் 21ஆம் தேதி நேபாளத்தின் லலித்பூர் நகரில் தொடங்கிய 8-ஆவது தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று திங்கள்கிழமை (ஏப் 23) முடிவடைகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com