கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்கு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ அனிதா நியமிக்கப்பட்டதற்கு நடிகையும்,
கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்கு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ அனிதா நியமிக்கப்பட்டதற்கு நடிகையும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வுமான ரோஜா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆந்திர அரசு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை நிர்வகிப்பதற்கு புதிய அறங்காவலர் குழுவை கடந்த வெள்ளிக்கிழமை நியமித்து உத்திரவு வெளியிட்டது. அக்குழுவில் விசாகப்பட்டினம் எம்எல்ஏ அனிதாவின் பெயரும் இடம்பெற்றது. கிறிஸ்வதரான அவர் அறங்காவலர் குழுவில் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. தாம் ஒரு கிறிஸ்தவர் என்றும் தன்னிடம் எப்போதும் பைபிள் புத்தகத்தை வைத்திருப்பதாகவும் அனிதா ஏற்கெனவே ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்திருந்த விடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை உண்டாக்கின.

இந்நிலையில், அனிதா ஞாயிற்றுக்கிழமை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு கடிதம் ஒன்றை எழதினார். அதில், நான் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறேன். எனக்கு அளிக்கப்பட்ட பதவியை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். நான் ஒரு ஹிந்து. ஹிந்து மதத்தை சார்ந்தவள். ஆனால் வகுப்பு பிரிவின்படி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள். ஏழுமலையான் மீது எனக்கு பக்தி அதிகம். பலமுறை ஏழுமலையான் தரிசனத்திற்காக திருமலைக்கு வந்துள்ளேன். ஆனால் ஊடகங்கள் என்னை ஒரு கிறிஸ்தவராக சித்திரித்து விட்டன. இதனால் நான் மனமுடைந்துள்ளேன். எனவே தாங்கள் எனக்கு வழங்கிய தேவஸ்தான அறங்காவலர் பதவியில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அனிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை மதிக்காமல் வேற்று மதப் பெண் ஒருவரை திருப்பதி கோவில் அறங்காவல் குழுவிற்கு நியமித்து இருப்பது கண்டனத்துக்கு உரியது. இதற்கு மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்பதுடன் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ரோஜா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com