தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்: வெங்கய்ய நாயுடு நிராகரிப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அளிக்கப்பட்டுள்ள பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் குறித்து சட்ட நிபுணர்களுடன்
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்: வெங்கய்ய நாயுடு நிராகரிப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அளிக்கப்பட்டுள்ள பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனைக்கு பின்னர் தீர்மான நகலை நிராகரித்துள்ளார் வெங்கய்யா நாயுடு. 
 
முதல் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகள் பதவி நீக்கம் தொடர்பான நோட்டீஸை அளித்தன.

அந்த நோட்டீஸில் காங்கிரஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 64 எம்.பி.க்களும், முன்னாள் எம்.பி.க்கள் 7 பேரும் கையெழுத்திட்டனர். 

நோட்டீஸ் குறித்து, மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் காஷ்யப், முன்னாள் சட்டத் துறை செயலர் பி.கே. மல்கோத்ரா ஆகியோருடன் வெங்கய்ய நாயுடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

மாநிலங்களவை செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளுடனும் நாயுடு ஆலோசனை நடத்தினார். அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், முன்னாள் அட்டார்னி ஜெனரல் கே. பராசரன் ஆகியோருடனும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான நோட்டீஸ் குறித்து வெங்கய்ய நாயுடு ஆலோசனை நடத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை வெங்கய்ய நாயுடு சந்தித்து பேசவும் வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியிருந்தனர். 

இந்நிலையில், சட்ட நிபுணர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னரே, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது எதிர்க்கட்சிகள் அளித்துள்ள பதவி நீக்க தீர்மான நோட்டீஸை நிராகரித்துள்ளதாக வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.
 
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக நோட்டீஸ் அளித்து காங்கிரஸ் முட்டாள்தனமான செயலில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com