நைஜீரியாவில் தேவாலயம் மீது துப்பாக்கி சூடு; 16 பேர் பலி 

நைஜீரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது நடந்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் பலியாகி உள்ளனர். 

லாகோஸ்: நைஜீரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது நடந்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் பலியாகி உள்ளனர். 

நைஜீரியாவில் பழங்குடியின முஸ்லிம் மக்களுக்கும், கிறிஸ்தவ மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்நாட்டில் புலானி பழங்குடியின பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவர்கள் விவசாயம் செய்யும் பிரிவினராக உள்ளனர்.

நிலங்களில் ஆடுகளை மேய விடுவது பற்றிய விவகாரத்தில் இரு பிரிவினருக்கும் இடையே நடைபெற்று வந்த வன்முறைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்னர்.

இந்நிலையில், குவெர் கிழக்கு நகரில் ஆயர் எம்பலம் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றின் மீது துப்பாக்கிகளுடன் சென்ற ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 16 பேர் பலியாகி உள்ளனர் என உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்களில் 2 பேர் கிறிஸ்தவ மத போதகர்கள் ஆவர். 

2018-ஆம் ஆண்டு தொடக்கத்தில் மத்திய மாகாணங்களில் (மகுர்டி) நடந்த மோதலில் 73 பேர் கொல்லப்பட்டனர். புலானி பிரிவை சேர்ந்தவரான அதிபர் முகமது புகாரி மே 2015-இல் பதவி ஏற்றபோது பாதுகாப்பை அதிகரிப்பதாக உறுதியளித்தார். ஆனால். இடையர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க எந்த நடவடிக்கையையும் எடுக்க தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அதற்கு அதிபர் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com