காவல்துறைக்கு ஆள் தேர்வு: இளைஞர்களின் மார்பில் எஸ்.சி., எஸ்.டி என குறியீடு

காவல்துறைக்கு ஆள் சேர்க்கும் பணியின்போது இளைஞர்களின் மார்பில் சாதிப்பிரிவுகளை குறிக்கும் விதமாக எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி. என குறியீடுகள்
காவல்துறைக்கு ஆள் தேர்வு: இளைஞர்களின் மார்பில் எஸ்.சி., எஸ்.டி என குறியீடு

போபால்: காவல்துறைக்கு ஆள் சேர்க்கும் பணியின்போது இளைஞர்களின் மார்பில் சாதிப்பிரிவுகளை குறிக்கும் விதமாக எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி. என குறியீடுகள் எழுதப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய பிரதேச மாநில காவல்துறைக்கு காவலர் பணிக்கு ஆள்சேர்க்கும் பணி நடைபெற்றது. இதில் அம்மாநில இளைஞர்கள் கலந்துக்கொண்டனர். காவலர் பணிக்கு தேர்வானர்களுக்கு தார் மாவட்ட மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மருத்துவ பரிசோதனைக்காக உள்ளாடையுடன் இளைஞர்கள் வரிசையில் காத்திருந்த போது அவர்களது சாதிப்பிரிவை குறிக்கும் விதமாக எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி. என அவர்களது மார்பில் குறியீடுகள் எழுதப்பட்டது. 

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுடன் பகிரப்பட்டு வருகிறது.

காவல்துறைக்கான ஆள் தேர்வில் கலந்துகொண்டவர்கள் மார்பில் சாதி கூறியீடு புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகிய நிலையில், காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தார் மாவட்ட காவல்துறை அதிகாரி விரேந்திர குமார் சிங் கூறுகையில், “ஆள்சேர்ப்பு முகாமிற்கு வந்த இளைஞர்களின் மார்பில் அவர்களுடைய சாதி குறியீடை எழுதவேண்டும் என்று எதுவும் உத்தரவிடப்படவில்லை. இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. உண்மையிலேயே மோசமானதாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் உறுதியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்,” என்றார். 

டிஜிபி ரிஷி குமார் சுக்லா பேசுகையில், மோசமான எண்ணத்தில் இச்சம்பவம் நடைபெறவில்லை என்றார். “உடல்தகுதி தேர்வில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறது என்பதை உறுதிசெய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது,”என சம்பவத்தை நியாயப்படுத்தி உள்ளார். 

தலைமை மருத்துவர் மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் ஆர்.சி. பானிகா இந்த சம்பவத்திற்கு தனது வருத்தத்தை தெரிவித்ததுள்ளார். "இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது, இது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com