இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு

கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது தேசிய மாநாட்டில் கட்சியின்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளராக மூன்றாவது முறையாக எஸ்.சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது தேசிய மாநாடு கேரளா மாநிலம் கொல்லத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச்செயலாளராக சுதாகர் ரெட்டி தேர்வு செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

மாணவர் தலைவர் கன்ஹாயா குமார் தேசிய குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய துணைப் பொதுச் செயலாளர் குருதாசன் தாஸ் குப்தா மற்றும் கேரளாவின் மூத்த தலைவர் ரவீந்திரன் ஆகியோர் மத்திய செயலகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தேசிய நிர்வாக உறுப்பினர்களாக கூடுதலாக 31 பேரும், தேசிய குழு உறுப்பினராக 126 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com