பெங்களூரு விமான நிலையத்தில் திருமுருகன் காந்தி கைது

ஜெர்மனியில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் உரை நிகழ்த்திவிட்டு ஜெர்மனியிலிருந்து இன்று அதிகாலை பெங்களூரு
பெங்களூரு விமான நிலையத்தில் திருமுருகன் காந்தி கைது

 
ஜெர்மனியில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் உரை நிகழ்த்திவிட்டு ஜெர்மனியிலிருந்து இன்று அதிகாலை பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மே பதினெழு இயக்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டும், மற்றும் 8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு பெங்களூர் விமான நிலையம் வந்திறங்கியவரை இன்று அதிகாலையில் கைது செய்துள்ளனர். 

வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார்.

பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்கு முறையினை வன்மையாக கண்டிப்போம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டியும், அவர் மீது தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் எந்த விமான நிலையம் வந்தாலும் கைது செய்யும் படி லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதால் திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளதாகலும், திருமுருகன் காந்தியின் கைது குறித்து தமிழக போலீஸாருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com