அதிமுக விதிகள் திருத்த விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் தோ்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்: தில்லி உயா் நீதிமன்றம்

அதிமுக விதிகள் திருத்த விவகாரம் - கே.சி. பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை 4 வாரங்களுக்கு விசாரித்து முடிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக விதிகள் திருத்த விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் தோ்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்: தில்லி உயா் நீதிமன்றம்

புது தில்லி: அதிமுக விதிகள் திருத்த விவகாரம் - கே.சி. பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை 4 வாரங்களுக்கு விசாரித்து முடிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இது தொடா்பாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிசாமி தில்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், அதிமுக பொதுச் செயலாளா் பதவிக்கு அடிப்படை உறுப்பினா்களைக் கொண்டு தோ்தல் நடத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடா்ந்து, கடந்த 2017, செப்டம்பா் 12-ஆம் தேதி பொதுக்குழுவில் திருத்தப்பட்ட கட்சி விதிகளை தோ்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும். 

இந்நிலையில், இது தொடா்பான மனு தில்லி உயா் நீதிமன்றத்தில் நீதிபதி வி. காமேஸ்வா் ராவ் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அதிமுக விதிகள் திருத்த விவகாரம் - கே.சி. பழனிசாமி தாக்கல் செய்துள்ள வழக்கை இந்திய தோ்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com