மேகதாதுவில் புதிய அணை கட்ட தமிழக முதல்வரை நேரில் சந்திக்க குமாரசாமி திட்டம்

கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த மேகதாதுவில் புதிய அணை கட்ட தமிழக
மேகதாதுவில் புதிய அணை கட்ட தமிழக முதல்வரை நேரில் சந்திக்க குமாரசாமி திட்டம்


பெங்களூரு: கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த மேகதாதுவில் புதிய அணை கட்ட தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளேன் என்று கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அதனால் இப்போது கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 71 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இன்னும் அதிகளவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு வரை திறக்க வேண்டிய நீரை இப்போது திறந்துவிடுகிறோம்.

ஒரு நாளைக்கு சராசரியாக 10 டி.எம்.சி. தண்ணீர் நீர் தமிழகத்திற்கு செல்கிறது. இந்த நீர் யாருக்கும் பலன் இல்லாமல் வீணாக கடலில் கலக்கிறது. அதனால் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்துறை அமைச்சர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதியை கேட்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அமைச்சர் டி.கே.சிவக்குமார் சமீபத்தில் தில்லியில் மத்திய அமைச்சர் நிதின்கட்காரியை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது இதுகுறித்து ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டுமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கு தான் அதிக பயன் கிடைக்கும். அதனால் கர்நாடகம் தனது சொந்த செலவில் அணை கட்ட தயாராக உள்ளது. நமது விவசாயிகளை பாதுகாக்க மேகதாதுவில் அணை கட்டியே ஆக வேண்டும். வேறு வழி இல்லை.

இதுகுறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளேன். மேலும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் நான் தயாராக உள்ளேன். இது குறித்து அவர்களுக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்தார் குமாரசாமி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com