திருமுருகன் காந்தி கைது: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு கண்டனம்

மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு கண்டனம்


மயிலாடுதுறை: மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் (ஓய்வு) த. ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் ஈழத்தமிழா் பிரச்னை குறித்து பேசிய மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி, தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு பற்றி பேசி, அரசின் மக்கள் விரோதப்போக்கை வெளிப்படுத்தினார். 

இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய அவா், பெங்களூருவில் கைது செய்யப்பட்டு, சென்னை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

 பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை, நீதிபதி சிறையில் அடைக்க மறுத்துவிட்டார். எனினும், திருமுருகன் காந்தியை போலீஸார் விடாமல், தொடா்ந்து விசாரித்து வருகின்றனா். அவா் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறற வேண்டும். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அதில் த. ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com