சுதந்திர தினவிழா: பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம் வேண்டுகோள்

தேசிய கொடியானது இந்திய மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்துவது, எனவே  சுதந்திர தினவிழாவை
சுதந்திர தினவிழா: பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம் வேண்டுகோள்


புதுதில்லி: தேசிய கொடியானது இந்திய மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்துவது, எனவே  சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிளாஸ்டிக்கால் ஆன தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பிளாஸ்டிக்கால் ஆன தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், அனைத்து குடிமக்களும் பிளாஸ்டிக்கால் ஆன தேசிய கொடிகளை உபயோகிக்க வேண்டாம் எனவும் அனைத்து மாநிலங்களுக்கும் மாநிலக் கோரிக்கைகள் வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

பிளாஸ்டிக்கால் ஆன தேசிய கொடிகளை உபயோகிக்காத படி மின்னணு மற்றும் அச்சு ஊடகத்தில் விளம்பரத்தப்பட வேண்டும். 

மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், நிர்வாகங்கள், அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் துறைகள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக்கால் ஆன தேசிய கொடிகளுக்கு பதிலாக காகித்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். சுதந்திர நிகழ்ச்சிக்கு பின்னர் காகிதத்தால் ஆன தேசிய கொடிகளை கைவிடப்படவோ அல்லது தூக்கி எறியவோ கூடாது. மேலும், தேசிய கொடிக்கு உலகளாவிய அன்பு, மரியாதை மற்றும் விசுவாசம் உள்ளது. இந்திய மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்துவது தேசிய கொடி. எனவே, சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை உரிய மரியாதையுடன் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com