வாழத்தகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

நாட்டில் வாழ்த்தகுந்த வசதியான நகரங்களின் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நேற்று
வாழத்தகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?


புதுதில்லி: நாட்டில் வாழ்த்தகுந்த வசதியான நகரங்களின் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நேற்று திங்கள்கிழமை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் 111 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியலில் புனே முதலிடத்தைப் பிடித்துள்ளது. நவி மும்பை 2-வது இடத்திலும், பெருநகர் மும்பை 3-வது இடத்திலும், சென்னை 14வது இடத்திலும் உள்ளது. 

நிர்வாகம், சமூக, பொருளாதார நிலை, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த பட்டியலின் விவரங்கள்: நாட்டில் வாழ்த்தகுந்த வசதியான நகரங்களில் முதல் 10 இடங்களில் மகாராஷ்டிராவிலுள்ள 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது மஹாராஷ்டிராவில் உள்ள புனே நகரம் முதலிடத்திலும், நவி மும்பை இரண்டாவது இடத்திலும், மும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து எந்த நகரமும் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.

111 நகரங்கள் இடம் பெற்றுள்ள பட்டியலில், மிக முக்கிய நகரங்கள் உள்ளடங்கிய உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு முதல் 10 இடங்களில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. தமிழகத்தின் திருச்சி நகரத்திற்கு 12வது இடத்தையும், தமிழகத்தின் தலைநகரான சென்னை 14வது இடத்தையும், தொழில் நகரங்களான கோவை 25 இடத்தையும், திருப்பூர் 29வது ஈரோடு 26வது இடத்தையும், மதுரை 28வது இடத்தையும் பிடித்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, ஆந்திர மாநிலம் திருப்பதி, பஞ்சாப் மாநிலம் சண்டிகர், மஹாராஷ்டிரா மாநிலம் தானே ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில், தமிழக நகரங்கள் முறையே, திருச்சி, 12; சென்னை, 14; கோவை, 25; ஈரோடு, 26; மதுரை, 28 மற்றும் திருப்பூர், 29வது இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில், தேசிய தலைநகர் புதுடில்லி, 65வது இடத்தை பிடித்துள்ளது. கஜியாபாத் 46வது இடத்தையும், ராய் பரேலி 49வது இடத்தையும் பிடித்துள்ளது. 

பட்டியலின் கடைசி 10 இடங்களில் பிகார் தலைநகர் பாட்னா, நாகாலாந்து தலைநகர் கொஹிமா, அருணாசலப் பிரதேச மாநில தலைநகர் இடாநகர் உள்ளிட்ட நகரங்கள் இடம் பெற்றுள்ளன. உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூர் பட்டியலின் கடைசி இடத்தை பிடித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பங்கேற்கவில்லை.

பனாஜி 90வது இடத்திலும், அலிஜர் 86வது இடத்திலும், குருகுராம் 88வது இடத்திலும், மீரட் 101வது இடத்திலும் உள்ளது. 

ஆண்டு இறுதியில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை சேர்ந்த தலா ஒரு நகரம், பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன. பட்டியலில் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் 7-வது இடத்திலும், மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபால் 10-வது இடத்தையும் பெற்றுள்ளன. 

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி 33வது இடத்தில் உள்ளது. குஜராத்திலுள்ள ஆமதாபாத் 23வது இடத்திலும், ஹைதராபாத் 27வது இடத்தை பிடித்துள்ளன.

பட்டியலின் கடைசி 10 இடங்களில் பிகார் தலைநகர் பாட்னா, நாகாலாந்து தலைநகர் கொஹிமா, அருணாசலப் பிரதேச மாநில தலைநகர் இடாநகர் உள்ளிட்ட நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com