ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம்

நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களில் 50 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செப்டம்பா் 25-ஆம் தேதி தொடங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி 
ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம்


புது தில்லி: நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 50 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செப்டம்பா் 25-ஆம் தேதி தொடங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி சுதந்திர உரையின்போது அறிவித்தாா்.

பாரதிய ஜனசங்கத்தை உருவாக்கிய தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த தினம் செப்டம்பா் 25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் தொடங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com