சூடானில் சோகம்: மாணவர்கள் சென்ற படகு கவிழ்ந்து 22 பேர் பலி

​சூடானில் உள்ள நைல் நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 22 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்


சூடானில் உள்ள நைல் நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 22 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சூடான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

சூடான் தலைநகர் கார்டவும் பகுதியில் இருந்து வடக்கே சுமார் 750 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நைல் நதியில் படகு ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது. அதில் 40 மாணவர்கள் பயணம்செய்துள்ளனர். இயந்திரம் கோளாறு காரணமாக திடீரெனப் படகு பழுதாகி நின்றது. சில நிமிடங்களிலேயே அது தண்ணீரில் மூழ்கி, அனைவரும் உயிரிழந்தனர். இது, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று குடும்பங்களில் தலா 2 குழந்தைகளும், இரண்டு குடும்பங்களில் தலா 3 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். 

உயிர்ழந்தவர்களின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படதா நிலையில், சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முறையான பாதுகாப்பு உபகரணங்கள் படகில் இல்லாததால் பலர் உயிரிழக்க நேர்ந்துள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

படகு கவிழ்ந்து மாணவர்கள் 22 பேர் பலியான சம்பவம், சூடான் நாட்டு மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

கடந்த வாரம் பெய்த கனமழைக்கு பின்னர் வெள்ளம் காரணமாக சுமார் 2.5 கி.மீ தொலைவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் படகில்தான் பள்ளிக்கு வந்து சென்றுள்ளனர். 

2013 ஆகஸ்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுக்கி 50 பேர் உயிரிழந்தனர். 2014 செப்டம்பரில் ஒரு படகு கார்டவுக்கு வடக்கே ஒரு படகு கவிழ்ந்ததில் 13 உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com