மத்தியப்பிரதேசத்தில் திடீர் வெள்ளம்: 11 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் பாறைகளில் தஞ்சம்

மத்தியப்பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தளமான சுல்தான் கார் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர்

குவாலியர்:  மத்தியப்பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தளமான சுல்தான் கார் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோர் வெள்ளம் சூழ்ந்த பாறைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், சிவாபுரி மாவட்டம் குவாலிய சிவாபுரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தளமான சுல்தான் கார் நீர்வீழ்ச்சியில் நேற்று குறைவான அளவு தண்ணீர் வெளியேறியதால் சுற்றுலா பயணிகள் 50-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள ஆற்றில் நீராடினர். ஆனால், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது.

இதனால், ஆற்றின் நடுவில் இருக்கும் பாறைகள் மீது இருந்த சுற்றுலா பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். இந்த திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 11 பேர் பலியாகியுள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் வெள்ளம் சூழ்ந்த பாறைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது டுவிட்டர் பக்க பதிவில், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் 7 பேர் கொண்ட மீட்பு குழுவினருடன் நான் தொடர்புகொண்டு பேசியதில், இதுவரை, பாறைகளில் சிக்கித்தவித்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் நரேந்திரம சிங் தோமரும் மீட்பு நடவடிக்கையில் பங்கு எடுத்துக்கொண்டுள்ளார். 

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க ராணுவ ஹெலிகாப்டர்களும், மாநில போலீஸாரும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com